Thursday, July 31, 2008

திருந்த மாட்டானா?

கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டதால் ரஜினியின் உண்மையான குணம் வெளிப்பட்டு விட்டது... கன்னடனின் உணர்வை பார்த்த பிறகும், ரஜினியின் உண்மை முகம் தெரிந்த பிறகும்...இனியாவது..அதிகாலை 4 மணிக்கு தியேட்டருக்கு போய் ரஜினி படம் பார்க்க தவம் கிடக்கும்இழி பிறவி தமிழன் திருந்த மாட்டானா?
ஏக்கத்தோடுஎதிர்பார்க்கும் -ஏமாளித்தமிழன்

Wednesday, July 23, 2008

பகுத்தறிவுவாதி.

நான் பகுத்தறிவுவாதி.
எனக்கு
மதம்,
மொழி,
கடவுள்,
மொழி,
நாடு,
அரசு
இதைப்பற்றியெல்லாம் கவலையில்லை.

-தந்தைபெரியார்

Tuesday, July 15, 2008

வெற்றி அல்லது வீரமரணம்

சே குவேரா ஃபிடல்கேஸ்ட்ரோவுக்கு எழுதிய கடிதம்
வெற்றி அல்லது வீரமரணம்
ஃபிடல்,இந்த நேரத்தில் எனக்கு பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. உங்களை மரியா அந்தோனியாவின் வீட்டில் சந்ததித்தது; உங்களுடன் வர என்னை நீங்கள் அழைத்தது; புறப்படத் தயாரானபோது நமக்கு ஏற்பட்ட பரபரப்பு.நடக்க இருக்கும் விபரீதம் எனக்கு எப்போது புரிந்தது தெரியுமா? ஒரு நாள் அவர்கள் (புரட்சிப் படையினர்) வந்து, இறந்து போனால் யாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்? என்று கேட்டார்கள். பிறகு, எல்லாம் புரிந்து விட்டது. ஒரு புரட்சியின் முடிவு, வெற்றி அல்லது வீரமரணம் என்பதைப் புரிந்து கொண்டேன்.இன்று, நாம் வளர்ச்சி அடைந்திருக்கிறோம். அன்று போல் இல்லாமல் பக்குவப்-பட்டிருக்கிறோம். ஆனால், கடந்த காலம் மீண்டும் திரும்புகிறது. க்யூப மண்ணிலே நிகழ்ந்த க்யூபப் புரட்சியில், எனக்கு அளிக்கப்-பட்டிருந்த கடமைகளை நான் நிறைவேற்றிவிட்டேன் என்று நினைக்கிறேன்.ஆகையால், நான், உங்களிடமிருந்தும் நமது தோழர்களிட-மிருந்தும், என்னுடைய க்யூப மக்களிடமிருந்தும் விடை பெறுகிறேன்.
கட்சியின் தலை-மையில் என்னுடைய பொறுப்புகளிலிருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும், மேஜர் பொறுப்பில் இருந்தும், க்யூபாவின் பிரஜைக்கான உரிமையி-லிருந்தும் நான் விலகுகிறேன். இனி, எனக்கு க்யூபாவு-டன் சட்ட ரீதியான எந்த உறவும் இல்லை. ஆனால், வேறு வகை-யில் பிணைப்புகள் உள்ளன. நிச்சயமாக அவற்றை என்னால் உதறித் தள்ள முடியாது.கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும்-போது, புரட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த, நான் நேர்மையாகவும் அர்ப்பணிப்போடும் செயல்பட்டு வந்தேன் என்றே நம்புகிறேன். நான் செய்த ஒரே தவறு என்ன தெரியுமா? சியாரா மிஸ்த்ரா மலைத் தொடரில் கழித்த முதல் சில தினங்களில் உங்கள் மேல் மேலும் அதிக நம்பிக்கை வைக்காமல் இருந்தது. ஒரு புரட்சி-யாளராக, ஒரு தலைவராகப் பரிணமித்த உங்களது குணாதிசயங்களை உடனடியாகப் புரிந்து கொள்ளத் தவறியது.கரீபிய சிக்கல் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த அந்தச் சோகமான, ஆனால் துடிப்பு மிக்க கால கட்டத்தில், உங்களுடன் சேர்ந்து, நமது மக்களின் பக்கம் நின்ற தருணத்-தை இன்றும் பெருமையுடன் உணர்கிறேன். அந்தச் சமயத்தில், நீங்கள் இயங்கியதைப் போல் அவ்வளவு பிரமாதமாக ஒரு தலைவர் செயல்படுவது அபூர்வமானது. உங்களைத் தயக்கம் இன்றி பின்பற்றியதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.என்னுடைய எளிமையான முயற்சிகளும் உதவிகளும் வேறு சில நாடுகளுக்குத் தேவைப்-படுகிறது. க்யூபாவின் தலைவராக நீங்கள் இருப்பதால், உங்களுக்கு மறுக்கப்பட்டதை என்னால் செய்ய முடியும் என்று முடியும்.ஆக, நாம் பிரிய வேண்டிய நேரம் வந்துவிட்டது.ஒரு பக்கம் மகிழ்ச்சியோடும் மறு பக்கம் துயரத்தோடும் நான் என் பயணத்தை மேற்-கொள்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். என் நேசத்துக்குரிய மக்கள் ஒரு சிறப்பான சமுதாயத்தை கட்டி எழுப்புவார்கள் என்ற என் நம்பிக்கையை இங்கே விட்டுவிட்டுப் பிரிகிறேன். புதிய போராட்டக் களங்கள் காத்திருக்கின்றன.நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்-கைக்குப் பாத்திரமாக விளங்குவேன். ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவதை - புனிதக் கடமையை மேற்கொள்வேன். அதை நிறைவேற்றவும் செய்வேன். இதுதான் என்னு-டைய பலத்துக்கு ஆதாரமாக இருக்கிறது.எங்கோ, கண் காணாத இடத்தில் என் முடிவு நெருங்குமானால், அந்தக் கடைசித் தருணத்தில் க்யூப மக்களையும், குறிப்பாக உங்களையும்தான் நினைத்துக் கொண்டிருப்-பேன்.எனக்குக் கற்றுக் கொடுத்ததற்கும் அதற்கு நீங்களே ஒரு உதாணரமாக விளங்கியதற்கும் என் நன்றி. என்னுடைய செயல்களின் விளைவு-கள் உங்கள் நம்பிக்கைக்குப் பங்கம் விளை-விக்காமல் இருக்க முயல்வேன். நமது புரட்சியின் அயல்நாட்டுக் கொள்கையோடு எப்போதும் அடையாளம் காணப்பட்டவன் நான். இப்போது, அது தொடர்கிறது. நான் எங்கு இருந்தாலும், ஒரு க்யூபப் புரட்சி-யாளனின் பொறுப்புணர்வோடு விளங்குவேன்.என் மனைவி மக்களுக்கு எந்தச் சொத்-தையும் நான் விட்டுச் செல்லவில்லை. அதற்காக வருத்தப்படவும் இல்லை. இப்படி இருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். அவர்கள் வாழ்வதற்குத் தேவையானவற்றை கவனித்துக் கொள்வதற்கும், குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதற்கும் ஓர் அரசு இருக்கிறது.இன்னும் பல விஷயங்களை உங்களிடமும், நமது மக்களிடமும் சொல்ல விருப்பம். ஆனால் தேவையில்லை என்றே நினைக்கிறேன். நான் சொல்ல விரும்புவதை வெளிப்படுத்தும் சக்தி, வார்த்தைகளுக்கு இல்லை. காகிதங்கள் வீணாவதைத் தவிர, வேறு பயன் ஏதும் ஏற்பட்டு-விடப் போவதில்லை.நமது முன்னேற்றம் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீரமரணம்.என் முழுமையான புரட்சிகரமான உணர்ச்சி வேகத்துடன் உங்களை ஆரத் தழுவிக் கொள்கிறேன்.

Thursday, July 10, 2008

கண்ணாமூச்சி

சின்னவனாய் அன்று...
என் கண்களை கட்டிவிட்டு ஆட்களை கண்டுபிடி என்றார்கள்.
முயன்றேன்... முடியவில்லை
பெரியவனாய் இன்று- கண்களைத் திறந்துகொண்டே ஆட்களை கண்டுபிடிக்கும் விளையாட்டு...
முயல்கிறேன்... முடியவில்லை.

-காசிஆனந்தன்

Wednesday, July 9, 2008

சலவை

உழைக்காதவன் வியர்வையை
கழுவிக்கொண்டிருக்கிறது...
உழைக்கிறவன் வியர்வை.
-காசிஆனந்தன்

சிந்தித்து ஏற்றுக்கொள்ளுங்கள்

நமக்கு சரிஎன்று படுவதாலோ,அல்லதுஒரு கருத்தை நமக்குச் சொன்னவர்கள் நல்லவர்கள் என்பதாலோ,நம் பெற்றோர்களால் சொல்லப்பட்டது என்பதாலோ அல்லது நம்முடைய ஆசிரியரால் கற்பிக்கப்பட்டது என்பதாலோ எந்த ஒரு கருத்தையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். அதனால் எல்லாருக்கும் என்ன நன்மை அந்தக் கருத்து நம் வாழ்க்கைக்கு அவசியமானதாக இருக்கிறதா என்று நீங்கள் சிந்தித்து உணர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள்

Monday, July 7, 2008

வயல்

என் தாத்தா என் தந்தையிடம் சொன்னார்
இது நெல் விளையிற இடம் என்று......
என் தந்தை என்னிடம் சொன்னார்

இது நெல் விளைந்த இடம் என்று....
நான் என் மகனிடம் சொல்லுவேன்

நெல் விளைந்த வயல் இருந்தயிடம் என்று......
இரவிக்குமார், சென்னை

இனத் துரோகம்!

"பாரத கலாச்சாரத்தைப் பறைசாற்றும் இதிகாசம்" என்ற பூரிப்பான அறிவிப்புடன், சன் தொலைக்காட்சி ஞாயிறுதோறும் இராமாயணத்தை மெகா தொடராக ஒளிபரப்பத் தொடங்கியிருக்கிறது. புதிய தொழில்நுட்பங்களுடன், "இராமாயணம்" ஒளிபரப்பப்படுவதாக அறிவிப்பு வேறு. ஏற்கனவே "இராம பக்தி"யில் மூழ்கிக் கிடக்கும் வடநாட்டு மக்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டு, "சங்பரிவாரங்களின்" இராமன் அரசியலுக்கு அவர்களை தயார்படுத்த, என்.டி.டி.வி. இந்தி மொழியில் இராமாயணத் தொடரைத் தொடங்கி விட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டு மண்ணையும், பார்ப்பனியமாக்க இதோ, என்னால் இயன்ற "அனுமான்" உதவி என்று விபிசணராக அவதாரமெடுத்துள்ளது சன் டி.வி.! மெகா தொடர்களை அறிமுகப்படுத்தி பெண்களை அதில் மூழ்க வைத்து தமிழ்நாட்டில் குடும்ப - சமூக உறவுகளில் கடும் நெருக்கடிகளை உருவாக்கியதில் சன் தொலைக்காட்சிக்கு பெரும் பங்கு உண்டு! அடுத்த கட்டமாக, இவர்கள், "இராமராஜ்யத்துக்கு" தாவியுள்ளார்கள் இதற்கான காரணத்தை, ஆழமாக பரிžலிக்க வேண்டியிருக்கிறது. கலைஞர் தொலைக்காட்சி மீதும் - கலைஞர் மீதும் - சன் தொலைக்காட்சிக்குள்ள குடும்ப பகை காரணமாக தனது கலைஞர் எதிர்ப்பை "திராவிடர் இயக்க" எதிர்ப்பாகவே மாற்றிக் கொள்ள சன் டி.வி. முன் வந்துள்ளது மிகப் பெரும் இனத் துரோகம்!
திராவிட இயக்க அரசியலை மூலதனமாக்கி, தொலைக்காட்சி நிறுவனத்தையும், தொழில் நிறுவனத்தையும் வளர்த்துக் கொண்டவர்கள் தான் இந்த சன் டி.வி. குழுமத்தார்! தமிழினத்தை அவமதிக்கும் இராமாயணத்தை எரிக்கச் சொன்னார் அண்ணா! "சக்கரவர்த்தித் திருமகன்" என்ற பெயரில் இராமனை தேசியத் தலைவனாக்க முயன்ற பார்ப்பன இராஜகோபாலாச்சாரிக்கு பதிலடி தந்து, "சக்கரவர்த்தித் திருமகன்" என்ற பெயரில் ராமனின் பார்ப்பன சுயரூபத்தை, கிழித்துக் காட்டினார் கலைஞர். சன் டி.வி. குழுமத்தின் நாயகராகப் போற்றப்படும் முரசொலி மாறன் - 1995 ஆம் ஆண்டு ஜூனியர் விகடன் வார ஏட்டுக்கு அளித்த பேட்டியில் "நாங்கள் இராவணனின் பரம்பரை" என்று பெருமிதத்தோடு அறிவித்தார். ஆனால் அவரின் வாரிசுகளோ, அந்த உணர்வுகளுக்கு சமாதி கட்ட துடிக்கிறார்கள்!
இந்திய அரசின் தூர்தர்சன் ஆண்டுக்கணக்கில் ஒளிபரப்பிய இராமாயணத் தொடரால் உந்தப்பட்ட மக்களின் மத உணர்வை - மத வெறியாக்கி - இராமன் கோயிலுக்கான அஸ்திவாரமாக்கி, அதை ஆட்சி பீடமேறுவதற்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொண்டது பா.ஜ.க. கூட்டம்! மீண்டும் இப்போது அதிகாரத்தைப் பிடிக்க, இவர்களுக்கு "ராமன்" தேவைப்படுகிறான். அதற்கான சதிவலை நாடு முழுதும் பின்னப்படுகிறது. சேது சமுத்திரத் திட்டத்தைப் பிடித்துக் கொண்டு, அதற்குள்ளே ராமனைத் தேடி, அந்த கற்பனை ராமனை தமிழகத்திலிருந்து இந்தியா முழுதும் தேர்தல் விற்பனைக்குக் கொண்டு போக முயற்சிக்கிறார்கள். அந்த விற்பனைக்கு மக்கள் சந்தையைத் தயார்படுத்தும் சதி வலைக்குள் சன் தொலைக்காட்சி விருப்பத்தோடு இடம் பிடித்திருக்கிறது.
அயோத்தியில் - பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில், நாடு முழுதும் மதக் கலவரங்கள் வெடித்தபோது, தமிழகம் மட்டும் "பெரியார் மண்ணாக" தனது அமைதியை வெளிப்படுத்தி கம்பீரமாக எழுந்து நின்றது. பார்ப்பனர்களுக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் - ராமாயணத்தை எடுத்துப் படியுங்கள் என்று தமது சமூகத்தினருக்கு அறிவுரை கூறினார் பார்ப்பனர் ராஜகோபாலாச்சாரி! அந்த எச்சரிக்கையை "வேதவாக்காகக்" கருதி வரும் கூட்டம், இப்போது இராமாயணத்தைப் புரட்டத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் எப்போதுமே பார்ப்பனர் பார்ப்பனியத்தின் பக்கமே நிற்கத் துடிக்கும் சன் தொலைக்காட்சிக் குழுமம் - இப்போது பச்சையாகவே வெளிவந்து விட்டது வரலாறு இவர்களை மன்னிக்காது.
ஆனாலும் திட்டவட்டமாக கூறுகிறோம் - இது இராமாயன காலமல்ல. துரோகத்தை தமிழர்கள் சரியாகவே புரிந்து கொள்வார்கள்.

Saturday, July 5, 2008

மதம்

ஏழைகளின் கோபத்திலிருந்து
பணக்காரர்களை காப்பாற்றும்
எளிய தந்திரத்தின் பெயர்தான்
'மதம்'
- ஆஸ்கார் ஒயில்ட்

Friday, July 4, 2008

அணு ஒப்பந்த அழிச்சாட்டியம்!

கள்ளத் திருடன்பேர் கரிகாற் சோழனா?
கொள்ளைக் காரன் பேர் குமண வள்ளலா?
குடலை உருவி மாலையாய்ப் போடும்
கொள்ளிவாய்ப் பேய் குடியிருக்கும் இடம்பேர்
'வெள்ளை மாளிகை' என்றால் விளங்குமா?
பிணமலை அடுக்கப் பெருக்கத்தின் பேர்தான்
அணு ஒப்பந்தம் அழிச்சாட் டியமா?
அழுகிய மலமே! பழிகார புஷ்ஷே
படுகுழி வெட்டப் பழகிப் பழகிச்
சுடுகாட்டையே நீ தொழுது கிடக்கிறாய்!
உன்சுட்டு விரலுக்கு கட்டுப் பட்டே
பெட்டிப் பாம்பாய் எம்பெருந் தலைகள்
நூறுகோடிப்பேர் தன்மானத்தைக்
கூறுபோட்டு உன்முன் குனிந்து நிற்க
மானங்கெட்ட ஒரு மன்மோகன் சிங்
அலுவாலியா சிதம்பரஅடிமைக் கும்பல்
அடுத்த வரிசையில் அத்வானி... சின்ஹா...
உன் ஆதிக்க வலையில் வீழ்ந்தபின்
தன்னாதிபத்திய தம்பட்டம் எதற்கு?
அங்கேபார்!

கியூபா நாட்டுக்கிழவன் காஸ்ட்ரோ
பிடரி சிலிர்க்கப் பீரிட் டெழுகிறான்
அர்ஜென்டீனா அரிமா முழக்கம்
கயவனே உன் காதுகள் கிழிக்கும்
ஐ.நா.மன்ற சுவர்கள் அதிர
முதுகெலும்புள்ள சாவேஸ் எழுந்து
சாத்தான் என்றுனைச் சாற்றிய வீரம்
சிவப்புக் கேயுள்ள செம்மாந்தப் பெருமிதம்.
-- தமிழேந்தி

Wednesday, July 2, 2008

மனிதாபிமானம் உள்ளவர்கள் படிக்கவேண்டிய பதிவு!?

இந்தியாவில் மூன்று வேளை உணவின்றி தவிப்போர் 50 சதவிகிதத்திற்கு மேல். அதிலும் இரவு உணவின்றி வெறும் வயிற்றுடன் படுக்கைக்குச் செல்லும் குழந்தைகள் மட்டும் 65 சதவிகிதத்திற்கு மேல் என்று ஐநா அமைப்பின் ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இவ்வாறு உணவுக்காக இந்திய ஏழைகள் படும்பாடு சொல்ல முடியாதது. ஆனால் உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து சேமித்து வைத்து விநியோகிக்கும் மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்தின் அலட்சியத்தால் கோடிக்கணக்கானோரின் பசியைப் போக்க வேண்டிய உணவுப் பொருட்கள் வீணாகி குப்பைக்குச் செல்லும் அவலநிலை அம்பலத்திற்கு வந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பயனால் இந்த அவலம் அம்பலத்திற்கு வந்துள்ளது. டில்லிவாசி ஒருவர் தகவல் உரிமைச் சட்டத்தின்படி, இந்திய உணவுக் கழகத்தின் சேமிப்புக் கிடங்குகளில் வீணான உணவுப் பொருட்களின் அளவும் மதிப்பும் எவ்வளவு என்று தகவல் கேட்டிருந்தார்.
கடந்த 1997 முதல் 2007 வரையிலான 10 ஆண்டுகாலத்தில் 10 லட்சம் டன் அளவிலான கோதுமை, அரிசி, நெல், மக்காச்சோளம் போன்ற உணவுப்பொருட்கள் வீணானதாக இந்திய உணவுக் கழகம் பதில் அளித்துள்ளது.
உணவுப் பொருட்களை வீணாகாமல் பாதுகாக்க மட்டும் ரூ.242 கோடி செலவிடப்பட்டதாக கூறியிருக்கும் அந்நிறுவனம் வீணாண பொருட்களை அப்புறப்படுத்தி குப்பைகளில் சேர்க்க மட்டும் 2.59 கோடி ரூபாயை செலவழித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில் வடமாநிலங்களான உ.பி, உத்தரகாண்ட், அரியானா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சல் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களில் மட்டும் வீணானது 7 லட்சம் டன் என்றும் கூறப்பட்டுள்ளது.
இப்படி வீணான இந்த 10 லட்சம் டன் உணவுப் பொருட்கள் ஒரு கோடி இந்தியரின் ஓராண்டு உணவுத் தேவையை நிறைவு செய்யக்கூடிய அளவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியைப் படித்தவுடன் எனக்கு நெஞ்சு கனக்கிறது. உங்களுக்கு...

-நன்றி.ஜிம்ஷா

Tuesday, July 1, 2008

31 பதக்கங்கள் - மருத்துவ மாணவி சாதனை

சென்னை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 12 - வது பட்டமளிப்பு விழா திங்களன்று நடைபெற்றது.210 பேர் பட்டம் பெற்றனர்.77 பேருக்கு பத்க்கங்கள் வழங்கப்பட்டன.சென்னையில் இளநிலை பட்டம் படித்த லட்சுமி பிரியா , 31 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தார்.பதக்கங்களை ஆளுநர் பர்னாலா வழங்கினார்.பதக்கமாலைகளால் அவர் கழுத்து நிறைந்தது. சான்றிதழ்களை அடங்கிய பெட்டியை அவர் தூக்கமுடியாமல் தூக்கிச் சென்றார். அரங்கத்தில் இருந்த அனைவரும் அவரின் திறமையைப் பாராட்டி கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.இதே அரங்கில் , முதுநிலை பட்டம் முடித்து சாலை விபத்தில் உயிரிழந்த நாமக்கல் கல்லூரி மாணவன் குழந்தைவேலுக்கான தங்கப்பதக்கத்தை அவரின் தந்தை கைலாசம் பெற்றுக்கொண்டார். அப்போது , அரங்கமே உணர்ச்சிவசப்பட்டது