Monday, December 22, 2008

தி ரிட்டர்ன் ஆப் எமர்ஜென்சி - மணி / சீமான் கைது


தி ரிட்டர்ன் ஆப் எமர்ஜென்சி - மணி / சீமான் கைது.

இது ஒரு விசித்திரமான நாடு. உலகத்தின் மாபெரும் ஜனநாயக நாடாகத் தனக்குத் தானே பெயர் சூட்டி பெருமைகொள்ளும் நாடு. ஆனால் நம் நாட்டின் செயல்களுக்கும் , சனநாயகத்திற்கும் சம்பந்தமேயில்லாதது தான் வேதனையிலும் வேதனை


இங்கே தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்துடன் அரசாங்கம் அமர்ந்து பேசும். ஆனால் தடை செய்யப்பட்ட இயக்கங்களைப் பற்றி பேசுவதும் , அவற்றிற்கான தார்மீக ஆதரவையும் வழங்குவதற்காகவும் ஒரு சாராரை கைது செய்யும்.

பிரிவினைக் கோசம் எழுப்பி ஊர்வலம் போகும் காஷ்மீரத்து இளைஞர்களை கண்ணீர் புகைக் குண்டு வீசிக் கலைப்பதுடன் கண் மூடிக்கொள்ளும் இந்த அரசு. ஆனால் தடை செய்யப்பட்ட வேற்று நாட்டு இயக்கத்தை பற்றி பேசவே தடைவிதிக்கும்.

பக்கத்து நாட்டில் தங்கள் சகோதரர்கள் படுகொலை செய்யப்படுகிறார்களே அதனை ஏனென்று கேட்கக்கூடாதா என்று கேட்டால் கண்டிப்பாக கேட்கிறேன் என்று தமது குடிமக்களையே அது ஏமாற்றப் பார்க்கும்.

ஒரு இனப்படுகொலையை தடுப்போம் என்று முழங்கும். ஆனால் அப்படுகொலையை தடுக்க முயல்வோர்களை ஆதரிக்காது. பாராமுகமாக இருக்கும்.

இப்படி ஒரு விசித்திரமான நாட்டின் ஒரு விசித்திரமான மாகாணம்தான் தமிழ்நாடு.

சுயநலக் கூட்டங்களும் , அடுத்த தேர்தலைத் தாண்டி உலகமே அழிந்துவிடப் போகிறது என்ற எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகளும் , இனமாவது , மண்ணாவது – எல்லாம் தன் கட்சிப்பதவிக்கும் , மக்கள் பிரதிநிதிகளாகவும் முன் தூசு என்ற மகா பரந்த எண்ணம் கொண்ட தமிழர்கள் தான் அதன் குடிமக்கள் அல்லது மாக்கள்.

இதில் ஜனநாயகம் என்பது அதிகாரத்தில் இருக்கும் கட்சிகளுக்கு ஆதரவான முழக்கங்கள் ஒரு தரப்பிலும் , எதிரிக்கட்சிகளின் எதிர்ப்பு முழக்கங்களும் மட்டுமே கொண்டதொரு வெற்று சண்டை மடம்.

பிழைப்பென்று வந்தபின்னர் இதில் நாடென்ன , இனமென்ன ,

நலமென்ன , குறையென்ன ,

அவனென்ன , இவனென்ன??

எல்லா முழக்கங்களிலும் பிழைப்பையொட்டியே நிலையை எடுப்பது அரசியல் வியாபார காந்தங்கள் லேட்டஸ்ட் கார்ப்பரேட்களிடம் கற்று வந்த பாடம். 

நீ சொல்லும் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை,ஆனால் அதைச் சொல்லும்

உனது உரிமைக்காக நான் உயிரைக் கொடுத்தும்போராடுவேன்” 

என்று வால்டேர் சொன்னாராம்.


கருத்துச்சுதந்திரத்தை நறுக்கென்று சொல்லும் இன்னொரு திருக்குறள் அல்லவா இது?

ஒரு இயக்கத்தைப் பற்றி அவதூறாகவும் , தூற்றியும் பேச இருக்கும் உரிமை அத்தகைய அவதூறுகளை கண்டிக்க இல்லையாம் .

என்னய்யா உங்கள் உரிமை?

பாகிஸ்தான் தீவிரவாதி இந்திய கோர்ட்டில் தனக்காக வாதிட இந்திய வக்கீலை வைத்துக் கொள்ளலாம் , அவனை நியாயப்படுத்திப் பேசலாம். வெளிநாட்டை சேர்ந்த ஒருவனை தன் அண்ணன் என்று அழைப்பது தவறாம் .

என்னய்யா உங்கள் நியாயம்?


சீமான் , கொளத்தூர் மணி மற்றும் மணியரசன் அவர்களைக் கைது செய்தமையானது கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் செயல். கட்சி வேறுபாடின்றி வன்மையாகக் கண்டிக்கப் பட வேண்டிய செயல் இது!!!

எமர்ஜென்சியின் இன்னொரு முகம். இதில் வேடிக்கையென்றால் , எமர்ஜென்சியை எதிர்த்து போராடியதாகச் சொல்லும் தி.மு.க. சற்றேறக்குறைய அதே பாணியை கடைபிடிப்பதுதான்.

கூட்டணி தர்மத்திற்காக செய்வதாக திராவிட முன்னேற்றக் கழகம் சொல்லிக்கொண்டாலும் , அது அக்கழகத்தின் அடிப்படைக்கே வேட்டு வைப்பது என்பதை இனிமேலாவது புரிந்து கொண்டால் சரிதான்.

ஜனநாயகத்தின் பாதுகாவலன் என்று சொல்லிக்கொண்டே ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்ததுதான் காங்கிரசின் வரலாறு. இதில் ஆச்சர்யமென்னவென்றால் , இப்போது அதே திசையிலேயே திமுகவும் பயணிப்பது தான்.

இதில் இன்னொரு வேடிக்கை, வழக்கமாக கருத்துச் சுதந்திரம் என்று கூப்பாடு போடும் பத்திரிகைகள் இப்போது இந்தக் கைதை வேடிக்கை பார்ப்பது. கருத்துச்சுதந்திரத்தை பாதுக்காக்கக் கூட தமக்கு உகந்த கருத்துக்களைச் சொன்னால் தான் குரல் கொடுப்போம் என்று நவீன நான்காம் தூண்களும் ஊமையாகிவிட்டன.

ஆனால் ஒன்று , எல்லாவற்றிற்கும் காலம் பதில் வைத்திருக்கிறது. அதைத்தான் நமக்கு வரலாறு கற்றுக்கொடுத்திருக்கிறது.

தமிழினம் தலைநிமிரும் காலம் வந்தே தீரும்.

அப்போது இந்தப் புல்லுருவிகளின் கோவணம் கிழிந்து அம்மணமாக ஓடத்தான் போகிறார்கள்.!!!

நன்றி-மதிபாலாபக்கங்கள் http://baluindo.blogspot.com/

1 comment:

ttpian said...

time will come...kizham&kizhavi body will be draagged in the streets of tamilnadu:let this will be a lesson for anti tamil parties....