* OMR சாலையில் டபுள் பெட்ரூம் பிளாட் வாங்குவது பற்றி திட்டமிடுகிறோம் நாம்
* மேலிருந்து விழும் குண்டுகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக குடிசைகளிலிருந்து வெளியேறி காடுகளில் தஞ்சம் புகுகிறார்கள் அவர்கள்
* இரவு கொசுக்கடியிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம் நாம்
* பகலில் கடிக்க வரும் பாம்புகளிலிருந்து தப்பிக்கும் வழியறியாது அடர்ந்த வனங்களில் தினமும் இறக்கிறார்கள் அவர்கள்
* அடுத்த வேளை உணவு, KFC Chicken-ஆ அல்லது Pizza Hut-ஆ என்று நண்பர்களுடன் பேசுகிறோம் நாம்
* நாளைக்காவது ஒரு வேளை உணவு கிடைக்குமா என்று சொந்த நாட்டில் அகதிகளாகத் தவிக்கிறார்கள் அவர்கள்
* பொங்கலுக்கு ஊருக்குப் போக இரண்டு மாதங்களுக்கு முன்பே online reservation செய்கிறோம் நாம்
* எப்போது தாய்நாடு போவோம் என்பது குறித்து யாதொரு நம்பிக்கையுமின்றி அகதிகளாக உலகெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள் அவர்கள்
* சத்யம் சினிமா, MGM ரிசார்ட், சனிக்கிழமை இரவுக் கொண்டாட்டங்கள் என சுகமாய் வாழ்கிறோம் நாம்
* ஒவ்வொரு நொடியைக் கழிப்பதும் போராட்டமாய் வாழ்கிறார்கள் அவர்கள்
* நாமும் தமிழர்கள், அவர்களும் தமிழர்கள் எனில், அவர்களுக்காக என்ன செய்யப் போகிறோம் நாம்?
செய்ய வேண்டியது ஆயிரம் இருப்பினும், சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான நமது எதிர்ப்பை, ஈழத்தமிழர்களுக்கான நமது ஆதரவைத் தெரிவிப்போம், வாருங்கள் நண்பர்களே!
Thursday, December 11, 2008
இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைகளை நிறுத்தக் கோரி போராடு வோம் :
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment